Skip to content
Home » கோஷ்டி பூசல் : பெரம்பலூர் திமுக விழாவில் பொறுப்பு அமைச்சர் படம் மிஸ்ஸிங்

கோஷ்டி பூசல் : பெரம்பலூர் திமுக விழாவில் பொறுப்பு அமைச்சர் படம் மிஸ்ஸிங்

  • by Authour

தமிழ்நாட்டில்  எந்தெந்த மாவட்டங்களுக்கு  அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லையோ, அந்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் நியமித்து உள்ளார். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக   அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவரும்,  போக்குவரத்து துறை அமைச்சருமான  சிவசங்கர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் இன்று  பெரம்பலூரில  துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின்  பிறந்தநாள் விழாவை மாவட்ட மாணவரணி கொண்டாடுகிறது. இதற்காக  துண்டு பிரசுரங்கள் வெளியிட்டு உள்ளனர்.  அதில்  மாவட்ட பொறுப்பு அமைச்சர் சிவசங்கர்  படமே  இடம் பெறவில்லை.

விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்குபவர்கள் பெயர்களில் முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய எம்.பியுமான ஆ. ராசா பெயர் முதலில் உள்ளது. அதுவும் பெரிய அளவில் ராசா பெயர் இடம் பெற்றுள்ளது.  அதற்கு அடுத்ததாக  அமைச்சர் சிவசங்கர் பெயரும், மாவட்ட பொறுப்பாளர்  ஜெகதீசன் பெயரும் , அருண் நேரு எம்.பி பெயரும் இடம் பெற்றுள்ளது.

துண்டு பிரசுரத்தில் முதல்வர்,  துணை முதல்வர், ஆ. ராசா ஆகியோரின்  படங்கள்  மட்டுமே  இடம் பெற்றுள்ளது. அமைச்சரின் படம் இடம் பெறவில்லை.  அதே நேரத்தில் முதல்வரை விட துணை முதல்வரின் படம் பெரிய அளவில் இடம் பெற்றுள்ளது.

இதுபற்றி   பெரம்பலூர் திமுக  முன்னோடிகளிடம் விசாரித்தபோது,  அமைச்சர் சிவசங்கரும், ஆ. ராசாவும் தனி கோஷ்டிகளாக  செயல்படுகிறார்கள். இதனால் தான்  சிவசங்கர்  போட்டோ இடம் பெறவில்லை.  விதிகளின்படி பார்த்தால்  சிவசங்கர் பெயர் தான் முதலில் இடம் பெற்றிருக்கவேண்டும்.   ஆ .ராசா படம் இடம்பெறும் நிலையில்,  சிவசங்கர் படத்தை முதலில் வைத்து அதன் பின்னரே ராசாவின் படமும் இடம்  பெற்றிருக்க வேண்டும்.

இவர்களுக்கிடையே  சில வருடங்களாகவே  இந்த மோதல் போக்கு தான்  நீடிக்கிறது. இது கட்சிக்கு நல்லதல்ல என்பதை இருவரிடமும் யார் சொல்லி புரிய வைப்பது என்பது தெரியவில்லை என  வேதனையுடன்  கூறினர்.