தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காமல், புறக்கணித்த மத்திய அரசின் ஓரவஞ்சனையான பட்ஜெட்டை கண்டித்து பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் அ. நடராஜன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் டி.சி. பாஸ்கர் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, கே. என். அருண் நேரு எம்.பி. ஆகியோர் சிறப்புரையாற்றினர். பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன், பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் குன்னம் ராஜேந்திரன், துணை செயலாளர்கள் பா. துரைசாமி, நூருல்ஹிதா இஸ்மாயில், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் அட்சயகோபால், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், டாக்டர் வல்லபன், உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் மட்டுமல்லாமல், பொதுமக்கள், வர்த்தகர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.