பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (30). இவருக்கு பிரவீனா (26) என்ற மனைவியும் சர்வேஷ்வரன் (5)யோகித் (3) என்ற 2 ஆண் குழந்தையும் உள்ளது
MRF தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் ராஜ்குமார் இன்று இரவு நைட் சிப்ட் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் தனது மனைவி பிரவீனாவை ஏற்றிக்கொண்டு வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் உறவினரின் வீட்டை நோக்கி சென்றுள்ளார்.
அப்பொழுது திடீரென்று வழிமறித்த 4 மர்ம நபர்கள் ராஜ்குமாரை வெட்டி உள்ளனர். கையில் வெட்டு காயங்களோடு பயத்தில அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று நடந்ததை கூறி உறவினர்களை சம்பவ
இடத்துக்கு அழைத்து வந்து பார்த்த பொழுது மனைவி பிரவீனா கழுத்தில் வெட்டுபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பலூர் போலீசார் பிரவீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கண்காணிப்பாளர் சியாமளாதேவி சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.
கணவன் ராஜகுமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின்னாக கூறுவதால் மர்ம நபர்களால் பிரவீனா வெட்டி கொல்லப்பட்டாரா இல்லை கணவனே மனைவியை வெட்டி கொன்று விட்டு நாடகம் ஆடுகிறாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.