பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் முன்பு உள்ள கம்பத்து ஆஞ்சநேயருக்கு ஆடிப்பெருக்கையொட்டி ஆஞ்சநேய பக்தர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை காவிரி ஆற்றுக்கு சென்று, அங்கிருந்து காலை தீர்த்த குடங்களில் ஆற்றில் புனித நீர் எடுத்து பாதயாத்திரையாக பெரம்பலூர ஸ்ரீவெள்ளந்தாங்கியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து வானவேடிக்கையுடன் நகர் வலம் வந்து மாலை 8மணியளவில் ஸ்ரீ கம்பத்து ஆஞ்சநேயருக்கு தீர்த்த அபிஷேகம் செய்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து இரவு 9 மணியளவில் கம்பத்து ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அருள்மிகு மதனகோபாலசுவாமி கோவிலிலும் சிறப்பு வழிபாடும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.