பெரம்பலூர் மாவட்டம் ரோவர் ஆர்ச் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நட்புறவை வளர்க்கும் வகையிலும் பெரம்பலூர் வாழ் மக்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும் மகிழ்ச்சியான தெரு ( HAPPY STREET ) என்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாவது காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான நட்புறவை மேம்படுத்தவும் குற்றம் செய்தவர்கள் மட்டுமே காவல்துறையை அணுகுவார்கள் என்ற மனநிலையை மாற்றி காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதனை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த மகிழ்ச்சியான தெரு நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பெரம்பலூர் மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் இயந்திரம் போல் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் குடும்பத்துடன் நேரத்தை ஒதுக்கவும், மன அழுத்தத்தை போக்கவும், சிறிது நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடவும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.
மேலும் இந்நிகழ்ச்சியின் மூலம் மறைந்து போன நமது பண்பாட்டு கலைகளான சிலம்பாட்டம், மான் கொம்பு, புளியாட்டம், வாள்வீச்சு,பரதநாட்டியம்போன்ற பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கவும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இடையே உள்ள திறமைகளை வெளி காட்டும் வகையிலும் இந்த மகிழ்ச்சியான தெரு நிகழ்ச்சி கொண்டாடப்படுகின்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் T.மதியழகன் மற்றும் பெரம்பலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் A.பழனிச்சாமி, பெரம்பலூர் நகர காவல் ஆய்வாளர் சக்திவேல், Happy street நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் காவலர் வாய்ஸ் விஜய் மற்றும் காவலர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.