பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவிலான தடகள போட்டி, மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்கள்.
இதில், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன், மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், பெரம்பலூர் ஒன்றிய கழக செயலாளர் எம்.ராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.அண்ணாதுரை, நகர் மன்ற துணை தலைவர் து.ஹரிபாஸ்கர், வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
