பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்றிய,நகர, பேரூர் மாணவர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நேர்காணல் நடைபெற்றது. மாவட்ட கழகச்செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நேர்காணலில் மாநில மாணவர் அணி துணை தலைவர் ராஜீவ்காந்தி, மாநில மாணவர் அணி துணைச்செயலாளர் ஆனந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு ஒன்றிய,நகர, பேரூர் மாணவர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் பதவிகளுக்கு மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார்கள்.
இதில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் செ.வல்லபன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர்,ஒன்றிய செயலாளர்கள் ந.கிருஷ்ணமூர்த்தி, வீ.ஜெகதீசன், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சோமு.மதியழகன், சி.ராஜேந்திரன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், துணை அமைப்பாளர்கள் பா.ரினோபாஸ்டின், இளகிருஷ்ணா, தமிழ்வேந்தன்,ராகவி அ.இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.