பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் காவல் சரக எல்லைக்குட்பட்ட மங்கூன் கிராம பகுதியில் உள்ள பாலக்கட்டையில் நின்றுகொண்டிருந்த பெண்ணிடம் அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத எதிரி கத்தியை காட்டி மிரட்டி அப்பெண் அணிந்திருந்த தங்க செயினை பறித்துச் சென்றுவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக பாடாலூர் போலீஸ் ஸ்டேசனில் ழக்குபதிவு செய்யப்பட்டத. பாடாலூர் காவல் ஆய்வாளர் சுப்புலெட்சுமி (பொறுப்பு) மற்றும் பெரம்பலூர் உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர்களின்தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வழிப்பறி திருடன் விட்டுச்சென்ற டூவீலரின் பதிவெண்கொண்டும் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர். பின்னர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் 1..சந்தோஷ்குமார் (26) கள்பாளையம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருச்சி மாவட்டம். 2. அர்ஜூன், திருவாணைக்காவல் திருச்சி மாவட்டம் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதனைதொடர்ந்து தனிப்படையினர் விரைந்து குற்றவாளியான சந்தோஷ்குமாரை நேற்று கைது செய்தனர். மேலும் விசாரணை செய்ததில் பெரம்பலூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கிலும் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்த நிலையில் மேலும் இவர் மீது திருச்சி மாவட்டத்தில் 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து மேற்படி வழக்கில் காணாமல் போன 1 பவுன் தங்க செயின் 01, வெள்ளி செயின் 01, கவரிங் செயின் 01 ஆகியவற்றையும் பெரம்பலூரில் 24.01.2023 -ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பறித்த 07 பவுன் தங்க ஆரத்தையும் மேலும் வழிப்பறிக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் வீச்சருவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.