பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர், ஆலத்தூர் ஒன்றிய குழு சார்பாக காலை 10 மணியளவில் குன்னம் பேருந்து நிலையம் அருகில் மத்திய பா.ஜ.க. ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் அனைத்து பொருள்களின் விண்ணை தொடும் விலைவாசி உயர்வு கழுத்தை நெரிக்கும் வேலை இல்லா திண்டாட்டம் , சொந்த லாபத்திற்காக கலவரத்தைத் தூண்டி மக்களை பிளவுபடுத்துகிற மோடி அரசை இந்திய திணித்து தமிழை பலிக்கும் கொடுமை 7.5 லட்சம் கோடி ஊழல் பா.ஜ.க.வை ஆட்சியை விட்டு வெளியேறு என கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் பி. கலியபெருமாள். க. பழனிச்சாமி தலைமையில் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வீ. ஞானசேகரன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் வி. ஜெயராமன், மாவட்ட துணை செயலாளர் நா.கோ. கலைச்செல்வன் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் தோழர் பி. முத்துசாமி, ஏ. ஐ. டி. சி. மாவட்ட தலைவர் கே. ஜெயராமன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் எஸ். பி. டி. ராஜாங்கம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் மாவட்டத் தலைவர் ஆர் தனராஜ், மாதர் சங்க மாவட்ட தலைவர் செ. அமுதா, முருகாயி மற்றும் கட்சி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் வர்க்க வெகுஜன அரங்கங்களும் 100க்கும் மேற்பட்டோர் மறியலில் பங்கேற்ற அனைவரையும் கைது செய்தனர் போலீசார்.