பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மதுவிற்பனை, தயாரித்தல், ஊறல் போடுதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் C.வேலுமணி தலைமையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் லதா, உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் அவரது குழுவினர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாட்டுசாரயம் விற்பனை மற்றும் தயாரித்தல், ஊறல் போடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றவர்களை தேடி சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று 02.03.2024 ம் தேதி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தொண்டபாடி to வெண்பாவூர் செல்லும் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிப்பதற்காக ஊறல் போட்டு வைத்திருந்த நபர்களான மணிவேல் (46) த/பெ சிங்காரம், வடக்குத் தெரு, தொண்டபாடி, வேப்பந்தட்டை, பெரம்பலூர் மாவட்டம். 2. பிரசாத் (24) த/பெ ராமலிங்கம் வடக்குத் தெரு, தொண்டபாடி, வேப்பந்தட்டை, பெரம்பலூர் மாவட்டம். ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 60 லிட்டர் நாட்டு சாராயம் மற்றும் 80 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி அதனை அங்கேயே அழித்தும் மேற்படி எதிரிகள் இருவரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நாட்டு சாராய விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் அவர்கள் மேற்படி எதிரிகள் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இது போன்று தங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அருகில் உள்ள காவல்ன நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலக தொலைப்பேசி எண் 9498100690 என்ற தொலைபேசியினை தொடர்பு கொண்டோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிக்கும் நபர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும்..