பெரம்பலூர் மாவட்டத்தில்,
ஆகஸ்ட் -20 அன்று உண்ணாவிரதம்! துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., கலந்து கொள்கிறார்! மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்..
அவர் கூறியதாவது…
பெரம்பலூர்,ஆக,19-
நீட் தேர்வை திணிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், துணை போகும் தமிழக கவர்னரை கண்டித்தும், ஆகஸ்ட் -20,(ஞாயிற்றுக்கிழமை), காலை 7.00 மணி முதல் , மாலை 5.00 மணி வரை, பாலக்கரையில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உண்ணாவிரத அறப்போர் நடைபெறுகிறது. தி.மு.க. இளைஞரணி,மாணவரணி,மருத்துவரணி சார்பில் நடைபெறும்
இந்த உண்ணாவிரதத்திற்கு, மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில்,சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் செ.வல்லபன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த உண்ணாவிரத அறப்போரில்
கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் ,நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.