பெரம்பலூர், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் சார்பாக 77 வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15-ஆம் தேதி மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் அ. சீனிவாசன் அவர்கள் தலைமை வகித்து, தேசியக்கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின உரையாற்றினார்.
அப்பொழுது பேசுகையில்… தனது இதயப்பூர்வமான 77 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை ஆசியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெரிவித்தார். மேலும் பேசுகையில் “இந்த வரலாற்று சிறப்புமிக்க நன்னாளில் இந்தியா எனும் நமது மகத்தான நாட்டின், இந்த புனிதமான மண்ணில் நமது நாட்டின் மீதுள்ள அன்பு
மற்றும் தேசபக்தி காரணமாக நாம் அனைவரும் இன்று இங்கு ஒன்றுகூடி சுதந்திர திருநாளை பெருமையுடன் கொண்டாடுகிறோம்.
இன்று நாம் அனைவரும் சதந்திர காற்றை சுவாசித்து, பேச்சுரிமை, எழுத்துரிமை, வாக்குரிமை போன்ற பல அடிப்படை உரிமைகளை பெற்று சுயமரியாதையுடன் சுதந்திரமாக வாழ்கிறோம். நமது சுதந்திரத்தை கொண்டாடும் இத்தருணத்தில், இந்த சுதந்திரத்தை அடைய வழிவகுத்த வீரமிக்க சுதந்திர போராட்ட வீரர்களையும், உயிர்த்தியாகம் செய்த எண்ணற்ற தன்னலமற்ற மாமனிதர்களையும், நினைவுகூர்ந்து அவர்களை போற்றி வணங்குவது நமது அனைவரின் கடமையாகும்” என்று கூறினார். இவ்விழாவில் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத்தின் கல்விநிறுவங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், புலமுதல்வர்கள், தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.