பெரம்பலூர் நகர் பகுதியான துறைமங்கலம் கே. கே .நகர், புதுக் காலனி, வடக்குதெரு பகுதி மக்கள் கே. கே நகர் மெயின் ரோட்டில் இருந்து நகராட்சி தண்ணீர் தொட்டி சுற்றுசுவர் வழியாக உள்ள பாதையை புதிய பேருந்து நிலையம்,கால்நடை மருத்துவமனை, அரசு நகர்ப்புற மருத்துவமனைக்கு வந்து செல்ல பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அந்த பாதைக்கு அருகில் உள்ள கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி சின்ன பொண்ணு ஆகியோர் பொது பாதையை ஆக்கிரமித்து பாதையில் கருங்கற்கள், செங்கல் போன்றவற்றை போட்டு வழியை மறைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பொதுமக்கள் பாதையை பயன்படுத்தாமல் சிரமப்பட்டு வருவதாக கூறி அவர்களிடமிருந்து பாதையை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறைமங்கலம் குறிஞ்சி குடியிருப்போர் நல சங்கத்தினர் பெரம்பலூர் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.
பொதுப்பாதை ஆக்கிரமிப்பு….மீட்டுத்தரக்கோரி பெரம்பலூர் நகராட்சி கமிஷனரிடம் மனு….
- by Authour
