பெரம்பலூர் மாவட்டம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கிருஷ்ணாபுரம் பகுதியில் ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதியினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் விடுதியில் குத்து விளக்கு ஏற்றி
வைத்து பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்வில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ராமலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ந.சரவணன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் டி.சி.பாஸ்கர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவன், உதவி பொறியாளர் கவிதா, வேப்பந்தட்டை வட்டாட்சியர் மாயகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.