பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (11.09.2023) நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில்
தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 267 மனுக்கள் பெறப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அருளாளன் மற்றும் அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.