பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் என்ற இடத்தில், கடந்த 17ம் தேதி அரசு பேருந்தின் பின்னால், மகேந்திரா எக்ஸ்யூவி கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்துக்குள்ளான காரை சோதனை செய்து பார்த்ததில், காரில் குட்கா கடத்தியது தெரிய வந்தது.
இது தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைத்து, சட்ட விரோத குட்கா கடத்தலில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளரான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கைலாஷ் குமார்(23), என்பவரை பெரம்பலூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட, ஸ்விப்ட் டிசையர் கார், 8 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பிலான 480 கிலோ குட்காவும், ஒரு லட்ச ரூபாய் ரொக்க பணத்தையும், போலீசார் பறிமுதல் செய்துள்ள தனிப்படை போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்