Skip to content
Home » அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய சம்பவம்….பரபரப்பு…

அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய சம்பவம்….பரபரப்பு…

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்லும் அரசு விரைவு பேருந்து ஒன்றில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் பெரம்பலூரைச் சேர்ந்த மாற்றுதிறனாளி பிரவீன்குமார் என்பவர் பெரம்பலூர் செல்வதற்கு பேருந்தில் ஏறியுள்ளார்.பேருந்து ‌நடத்துனர் ஞானப்பிரகாசம் என்பவர் அந்த மாற்றுதிறனாளி பிரவீன்குமாரிடம் பயணச்சீட்டு கேட்டபோது பிரவீன்குமார் மாற்றுத்திறனாளிக்கான இலவச பேருந்து பயண அடையாள அட்டை நகலினை காட்டியுள்ளார்.நகல் தெளிவாக இல்லாததால் நடத்துனர் உரிய உண்மை அடையாள அட்டையை கேட்டுள்ளார்.அதற்கு பிரவீன்குமார் உண்மையான இலவச பேருந்து பயண அடையாள அட்டை வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார்.நகலில் எதுவும் தெளிவாக இல்லாததால் நடத்துனர்‌ஞான பிரகாசம் பிரவீன்குமாரை திருச்சி நம்பர் 1 டோல்கேட்டில் ‌இறக்கிவிட்டுள்ளார்.பின்னர்‌ பேருந்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வந்த நின்ற போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் நடத்துனர் பேருந்து விட்டு இறங்கிய உடன்‌ அவரை தாக்கி விட்டு தப்பித்து சென்றுவிட்டனர்.இதனையடுத்து ஓட்டுநர் வெங்கடேசன் பயணிகளை வேறு பேருந்திற்கு மாற்றி அனுப்பிவிட்டு அதே பேருந்தில் நடத்துனரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் நடத்துனர் ஞானப்பிரகாசின் புகாரை பெற்று அவரை தாக்கி சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் நடத்துனரை தாக்கியது பிரவீன்குமாரின் தந்தை பன்னீர்செல்வம் மற்றும் அவரது தம்பி நவீன் குமார் என்பது தெரிய வருகிறது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *