ஆந்திராவை சேர்ந்த பக்தர்கள் சபரிமலைக்கு சென்றனர். சாமி தரிசனம் செய்து விட்டு பஸ்சில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். பஸ் இன்று மதியம் 12.30 மணி அளவில் பெரம்பலூரில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கரடி முனீஸ்வரர் கோவில் அருகே வந்தபோது பக்தர்கள் பஸ்சை ஓரமாக நிறுத்தி பஸ்சுக்குள் சமையல் செய்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சில் தீப்பிடித்தது. இதில் பஸ் முழுவதும் எரிந்து போனது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை. இது குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.
எரிந்து போன பஸ் ஆந்திர மாநிலம் அமடலவலசா என்ற ஊரைச் சேர்ந்த சீரா ராமகிருஷ்ணாவுக்கு சொந்தமானது. தெனாலி நாக பூஷணம் பஸ்சை ஓட்டிவந்தார்.