Skip to content
Home » பெரம்பலூர் சம்பவம்…. கைது செய்யவில்லை என்றால் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்… பாஜ., அண்ணாமலை

பெரம்பலூர் சம்பவம்…. கைது செய்யவில்லை என்றால் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்… பாஜ., அண்ணாமலை

கரூர் மாவட்டம் நன்னியூர் புதூரை அடுத்த என்.குளத்தூரில் கனகராஜ் என்ற இளைஞர் வெளிநாட்டில் வேலை பார்த்த போது உயிரிழந்தார். அவரது உடல் பாஜக சார்பில் கடந்த செப்டம்பர் 10ம் தேதி கரூர் கொண்டு வந்து எரியூட்டப்பட்டது. உடலை கொண்டு வர பாஜக மாணவர் அணி சார்பில் இங்கிலாந்து நாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களிடம் நிதி திரட்டப்பட்டு கனகராஜின் உடல் கரூர் கொண்டு வரப்பட்ட நிலையில், இன்று உயிரிழந்த கனகராஜின் வீட்டிற்கு வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவரது தாய் மற்றும் சகோதரிக்கு ஆறுதல் தெரிவித்தார். பிறகு, வசூலிக்கப்பட்ட நிதியில் மீதமிருந்த தொகையான 5 லட்சத்துக்கான காசோலையை அவர்களிடம் வழங்கினார். தொடர்ந்து கனகராஜின் புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை..

பெரம்பலூரில் நடந்த பாஜக நிர்வாகி தாக்குதலுக்கு எதிரானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பாஜக சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும். பாஜகவினரை வன்முறையை நோக்கி திமுகவினர் தள்ள வேண்டாம்.

தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பி வைத்த 13 மசோதாக்களில், 12 மசோதாக்கள் பல்கலைக் கழகங்களில் தலைவர் பதவியில் ஆளுநரின் அதிகாரத்தை நீக்கிவிட்டு, முதல்வரை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர். இது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

காவிரி நீர் பிரச்சினையில் தமிழக முதல்வர் ஒரு அறிக்கை கூட விடவில்லை. கூட்டணி கட்சியான காங்கிரஸ் மூத்த நிர்வாகியான ராகுல் காந்தி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால் மறுக்கிறார். பாஜகவிற்கு நல்ல எழுச்சி இருக்கிறது. அதன் வெற்றி வரும் 2024 தேர்தலில் தெரியும்.

எடப்பாடியை மட்டும் இல்லை. ஒவ்வொரு கட்சிக்காரர்களும் பிரதமராக வர வேண்டும் என தங்கள் தலைவர்களை நினைத்து ஆசைப்படலாம். ஆனால், மோடியுடன் ஒப்பிட்டு யாரைப் பற்றி பேசினாலும், எனக்கு சிரிப்புதான் வருகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *