பெரம்பலூர் நகராட்சி சார்பாக கழிவுகளை குறைத்தல், மறு பயன்பாடு, மறுசுழற்சி, என்ற அடிப்படையில் பழைய ஆடைகள், பெட்ஷீட், பழைய பிளாஸ்டிக், பொருட்கள் பழைய பொம்மைகள், பழைய புத்தகங்கள், பழைய காலணிகள், ஆகியவற்றை சேகரிப்பதற்காக அர ணாரையில் 16, மற்றும்17 வது வார்டுகளில் நகர் மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் மற்றும் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராதா மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்து விழிப்புணர்வை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர் துரை காமராஜ் மற்றும் நகர அமைப்பு ஆய்வாளர் மாணிக்க செல்வன், துப்புரவு ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், மோகன், துப்புரவு மேற்பார்வையாளர் விநாயகம் மற்றும் தூய்மை இந்திய திட்டத்தின் பரப்புரையாளர் மும்தாஜ்பானு மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.