Skip to content
Home » பெரம்பலூர் அருகே ஆம்லேட் கேட்டு ஓட்டலை அடித்து நொறுக்கிய வழக்கில் 3 பேர் கைது..

பெரம்பலூர் அருகே ஆம்லேட் கேட்டு ஓட்டலை அடித்து நொறுக்கிய வழக்கில் 3 பேர் கைது..

பெரம்பலூர் அருகே கல்பாடி பிரிவு சாலையில் அதிமுக பிரமுகர் மாமுண்டிதுரை என்பவருக்கு சொந்தமான உணவகத்தை இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மர்ம கும்பல் அடித்து நொறுக்கியது. இந்த சம்பவ தொடர்பாக அதிமுக பிரமுகர் மாமுண்டி துரை சிசிடிவி காட்சிகளோடு பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சியகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் மாமுண்டிதுரை நடத்தும் உணவகத்துக்கு அருகிலேயே உள்ள பிரபல உணவகத்தில் வேலை செய்யும் அழகேந்திரன் என்பவர் தான் உணவகத்தை அவரது நண்பர்களோடு சேர்ந்து அடித்து நொறுக்கியது தெரிய வந்தது. இதையடுத்து அழகேந்திரனை பிடித்த போலீசார் அவனிடம் நடத்திய விசாரணையில், அதே கல்பாடி பிரிவு ரோட்டில் இயங்கும் பிரபல (அஸ்வின்) உணவகத்தில் அழகேந்திரன் வேலை செய்துள்ளார் , கடந்த சில மாதங்களாக பிரியம் உணவகத்தில் சாப்பிடுவது வழக்கம் அதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மதிய உணவு சாப்பிட ஹோட்டலுக்கு வந்துள்ளார் அப்பொழுது ஆம்லெட் கேட்டதாக கூறப்படுகிறது உணவக மாஸ்டர் ஆம்லெட் போடுவதற்கு தாமதமானதால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு அழகேந்திரன் புரோட்டா மாஸ்டர் சுகுமாரை தாக்கிவிட்டு சென்றுள்ளார். இதை  அறிந்த உணவாக உரிமையாளர் மாமுண்டி துரை அழகேந்திரன் வரவழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அழகேந்திரன் அவரது நண்பர்களான கலையரசன், விக்கி,கமல், அஜய், அபி , ஆகியோரை அழைத்துக் கொண்டு இரவு நேரத்தில் முகத்தில் துணி கட்டிக் கொண்டு கடையை அடித்து உடைத்ததாக போலீசரணையில் கூறியுள்ளனர். இதையடுத்து ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அழகேந்திரன் கலையரசன் விக்கி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கமல் அஜய் அபி ஆகிய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *