அதிமுக சார்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவிற்கு எதிராக மீண்டும் ஓ பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்தார் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழ செல்லும் பெரும்பான்மை வாய்ந்த பொதுக்குழ உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டது செல்லும் என்று
தீர்ப்பு வழங்கியதை அதிமுகவினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் காமராஜர் வளைவு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாசலம் தலைமையில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மருதைராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை செழியன், நகர செயலாளர் ராஜ பூபதி, பெரம்பலூர் ஒன்றிய கழக செயலாளர் செல்வகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.