தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் இன்று கழக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.அதன்படி பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம் பை. இரா. தமிழ்ச்செல்வன் தலைமையிலும் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வரகூர். அருணாச்சலம் முன்னிலையிலும் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள புரட்சித்தலைவி
அம்மா அவர்களின் திருவுரு சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது.அதனைத் புதிய பேருந்து நிலையத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருதராஜா, சந்திரகாசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை. செழியன் ,ஒன்றிய கழகச் செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.