பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் தண்ணீர் பந்தல் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கர வாகனமும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். விபத்தறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரண்டு மாணவர்களையும் மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காயமடைந்த மாணவர்கள் பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் அமைந்துள்ள அரசு தொழிற் பயிற்சி மையத்தில் முதலாமாண்டு ஐடிஐ படித்து வரும் மங்கள மேடு கிராமத்தைச் சேர்ந்த ஜீவா மற்றொரு மாணவர் முருக்கன்குடியைச் சேர்ந்த மகேஷ் என்பதும் தெரிய வந்தது.
இரு மாணவர்களுக்கும் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் பயிலும் இடத்திலிருந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் தங்கள் வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முற்படும் போது லாரியும் இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நடந்ததாக பெரம்பலூர் போலீசார் தெரிவித்தனர்.