பெரம்பலூர் சங்குப் பேட்டை பகுதி வெள்ளந்தாங்கி அம்மன் கோவில் ஏரியில் அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் இன்று காலை சென்றிருந்த போது ஏரியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவரின் சடலம் மிதந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து பெரம்பலூர் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் நகர போலீசார் ஏரியில் மிதந்து கொண்டிருந்த ஆண் சடலத்தை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா கொரக்கவாடி கிராமத்தைச் சேர்ந்த மருத முத்து மகன் மதியழகன் வயது 29 என்பதும் இவர் அதிக மதுபோதையில் உயர் ரத்த அழுத்தத்தால் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மனநிலை சரியில்லாதவர் போல் நடந்து கொண்டதால் கடந்த 24 ஆம் தேதி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதும் பின்னர் 25 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மருத்துவமனையில் தப்பி சென்றுள்ளதாகவும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் தேடப்பட்டு வந்த மதியழகன் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் அவரது இறப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.