பெரம்பலூர் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி சாவித்திரி(45), இவர்களுக்கு சஞ்சய், ஜீவா என்ற இரு மகன்களும் பவிஷா என்ற மகளும் உள்ளனர். முருகேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சாவித்திரி தற்போது சித்தாள் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. பெரம்பலூர் நான்கு ரோடு அருகே முத்துலட்சுமி நகர் பகுதியில் சாவித்திரி ஒரு கட்டிட பணியில் சித்தாள் பணியில் இருந்த போது இன்று மாலை பெய்த மழையில் இடி மின்னல் சாவித்ரி யை தாக்கியதில் சாவித்திரி மயங்கி விழுந்துள்ளார்.பின்னர் அவருடன் பணியில் இருந்தவர்கள் சாவித்திரியை பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
ஏற்கனவே நேற்று இதே போன்று பெரம்பலூர் அருகே சாத்தனூர் என்ற இடத்தில் முருகன் என்பவர் இடி மின்னல் தாக்கி இறந்த நிலையில் தற்போது சாவித்திரியும் இடி மின்னல் தாக்கி இறந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது