பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்த பசும்பலூர் கிழக்கு காலனி பகுதியை சார்ந்த ரமேஷ் என்பவர் 100 க்கு எண்ணிற்கு தொடர்பு கொண்டு பசும்பலூரில் மின்சாரம் தாக்கி மூன்று நபர்கள் பலியாகி விட்டார்கள் இன்று தகவல் தெரிவித்துள்ளார் இதனைத் தொடர்ந்து. பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் இருந்து அப்பகுதியில் அருகில் உள்ள வ.களத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
காவல்துறையினர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று கிராமம் முழுவதும் தேடிப் பார்த்தனர் கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் யார் இறந்தார்கள் என்று தெரியாமல் குழப்பத்தில் ஊர் முழுவதும் தேடிப் பார்த்தனர். இறுதியாக போன் செய்த நபர் யார் என்று போலீசார் விசாரணை செய்த போது ரமேஷ் என்பவர் எனது வீட்டில் கடந்த சில நாட்களாக மின்சாரம் இல்லை என்றும் இதை புகார் தெரிவித்தால் யாரும் வரமாட்டார்கள் என்றும், இதனால்தான் நான் என் பெயரையும் என் மனைவி சோனியா மற்றும் என் மகள் பேரையும் கூறி இறந்து விட்டார்கள் என்று பொய்யாக கூறினேன் என்று கூறியுள்ளார். பொய்யாக தகவல் தெரிவித்து எங்கள் அனைவரையும் நேரத்தையும் வீணடித்து விட்டாய் என்று குழம்பிக் கொண்டே சென்றனர். மேலும் இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
