பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒதியம் கிராமத்தில் வசித்து வரும் ரஹமத் பீபி என்ற பெண் தனியாக வசித்து வருகிறார். அவருக்கு தொகுப்பு வீடு ஒன்றும் கூரை வீடு ஒன்றும் இருந்துள்ளது இந்த நிலையில் தொகுப்பு வீட்டில் துணிமணி நகைகள் வைப்பது வழக்கம் அந்த வகையில் நேற்று இரவு நகையும் 30,000 ரொக்க பணத்தையும் தனது பீரோவில் வைத்து அதனை பூட்டி விட்டு அருகே உள்ள கூரை வீட்டிற்க்கு சென்று தூங்கி உள்ளார். இன்று அதிகாலையில் தனது தொகுப்பு வீட்டுக்கு வந்து பார்க்கு போது தொகுப்பிவிட்டின் முன்புறம் உள்ள பூட்டு உடைந்து இருப்பதையும் உள்ளே திறந்து பார்த்தால் பீரோவில் உள்ள துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் தொகையை தேடி பார்த்தார். அதனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
