ஒவ்வொரு வாகனங்களின் தனித்தன்மையை பாதுகாக்க ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரு பதிவெண் வழங்கப்படுகிறது. அந்த பதிவெண் மூலம் வாகனத்தின் உரிமையாளர், அவரது முகவரியை அறியமுடியும்.
ஆனால் பெரம்பலூரில் ஒரே பதிவெண் கொண்ட இரண்டு காா்கள் சுற்றியது. இதனால் போலீசார் 2 கார்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த பதிவெண் TN 46, X 1180 .
இதில் ஒரு காரின் உரிமையாளர் இளஞ்செழியன், அவர் திமுக பிரமுகர். இன்னொரு கார் பிச்சைமுத்து என்பவருக்கு சொந்தமானது. அவர் பாஜக பிரமுகர்.
இவர்கள் அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருந்தாலும், ஒரே எண் கொண்ட காரை வைத்திருந்தனர். இதில் யார் வைத்திருப்பது ஒரிஜினல் பதிவெண் என ஆய்வு செய்ததில் திமுக பிரமுகர் இளஞ்செழியன் வைத்திருந்தது ஒரிஜினல் என தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து பாஜக பிரமுகர் பிச்சைமுத்துவிடம் விசாரணையை முடுக்கி விட்டனர். அவர் வேறு ஒரு நபரிடம்இருந்து அந்த காரை வாங்கியதாக கூறினார். எனவே அந்த கார் திருட்டு காராக இருக்கலாம் என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.