பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை அருகே இந்திரா நகரில் வசித்து வருபவர் பொன்னுசாமி மகன் செல்வகுமார். செல்வகுமாரின் உறவினர் பெரம்பலூர் நகர் எடத்தெருவைச் சேர்ந்தவர் பட்டை என்ற பழனியாண்டி, இவர் வல்லதரசு என்ற பாண்டி என்ற ரவுடி கொலை வழக்கில் தொடர்புடையவர் ஆவர்.பழனியாண்டி தனது தந்தை இறந்துவிட்ட நிலையில் தாயார் லட்சுமி என்பவருடன் வசித்து வருகிறார்.ரவுடி பழனியாண்டிக்கு 2 மனைவிகள் குழந்தை எதுவும் இல்லை,முதல் மனைவி புஷ்பா என்பவர் வேறு நபருடன் திருமணமாகி எடத்தெருவில் வசித்து வருகிறார். இரண்டாம் மனைவி லதா என்பவர் 6 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார்.இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பழனியாண்டி தனது உறவினர் செல்வகுமாரின் வீட்டிற்கு மது போதையில் அடிக்கடி வந்து புலம்பி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் செல்வகுமார் இன்று மதியம் 12 மணிக்கு நொச்சியத்திலுள்ள தனது வயலிற்கு சென்று விட்ட நிலையில் அவரது மனைவி கற்பகம் என்பவர் வீட்டிற்கு வெளியே துணி துவைத்து கொண்டிருந்த போது மாலை சுமார் 3:30 மணியளவில் செல்வகுமாரின் மகன் ரவி சங்கர் என்பவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கதவை திறந்து பார்த்த போது பழனியாண்டி சேலையில் தூக்கிட்டு தொங்கியவாறு பார்த்து கத்தியுள்ளார். இந்த நிலையில் மகனின் சத்தம் கேட்டு ஓடி வந்த கற்பகம் அக்கம்பக்கத்தினரல அழைத்து தூக்கிலிருந்து பழனியாண்டியை இறக்கி 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்துள்ளனர் அவர்கள் வந்து பரிசோதித்த போது பழனியாண்டி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.இந்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் நகர போலீசார் இறந்த ரவுடி யின் உடலை பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்ததனர்.ரவுடியின் இறப்பு குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரவுடி பழனியாண்டி மீதது வல்லதரசு என்கிற பாண்டி என்ற ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் நிலையில் தனக்கு தண்டனை கிடைத்துவிடும் என்பதாலும் வழக்கறிஞருக்கவழக்கறிஞருக்கு பணம் ரெடி பன்னி தர வேண்டும் என்று மது போதையில் மன குழப்பத்தில் இருந்தாகவும் அதனால் தான் பழனியாண்டி தூக்கிட்டு இறந்திருக்கலாம் என்று அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.