பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் உபகோயில்களான பெரியசாமி,
நாககன்னி, செங்கமலையான், பொன்னுசாமி ஆகிய
திருக்கோயில்களில் சுடுமண்ணால் ஆன சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்த வந்த நிலையில் கடந்த 2021 ம் ஆண்டு திருக்கோயில்களில் உள்ள சுடுமண் சிலைகள் சேதப் படுத்தப்பட்டன.
முற்றிலும் சேதப்படுத்தப்பட்ட 29 சுடுமண் சிலைகளை புதிதாக செய்து கொள்ளவும். 5 சுடுமண் சிற்பங்களை பழுது பார்க்கவும் உபயதார் மூலம் அதனை செய்து கொள்ள அங்கீகரித்து இந்து அற நிலையத்துறையால்
உத்தரவு வழங்கப்பட்டு
மேற்படி திருக்கோயிலில் புதிதாக சுடுமண்ணால் செய்யப்பட்டுள்ள 29 சிலைகளையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த 27.03.2023 அன்று அருள்மிகு பெரியசாமி மற்றும் செங்கமலையார் திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றது.
தற்பொழுது அருள்மிகு பெரியசாமி திருக்கோயிலில் இன்று 09.12.2023 ந் தேதி 09.00 மணிக்கு கோயில் காவலர் பணிக்கு சென்ற பகல் காவலர் மதுபாலன் என்பவர் சுடுமண்ணால் செய்யப்பட்ட ஸ்ரீ பெரியசாமி சிலையின் வலதுபுறம் உள்ள கன்னத்தில் இருந்து ஒரு பகுதி கீழே விழுந்துள்ளது என செயல் அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக நேரில் சென்று பார்வையிட்டதில் மழையினால் அருள்மிகு பெரியசாமி திருக்கோயிலில் உள்ள பெரியசாமி சிலையில் வலது மீசையுடன் கன்னப்பகுதி பெயர்ந்து சேதமடைந்துள்ளது.
மேலும் அதன் அருகில் உள்ள பட்டத்து குதிரை சிலையும் விரிசல் ஏற்பட்டு
பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது, மற்றும் அருள்மிகு செங்கமலையார் திருக்கோயிலில் சுடுமண்ணால் செய்யப்பட்ட செங்கமலையார். பொன்னுசாமி, பொன்னுஞ்சடையார் சிலைகளிலும் விரிசல் ஏற்பட்டு பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது.
இதை யாரும் அச்சப்படும் தேவையில்லை மழையின் காரணமாக இந்த சிலைகளில் விரிசல் ஏற்பட்டு இருக்கலாம் என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
*குறிப்பு* இதே ஆலயத்தில் சில மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் சிலைகளை உடைத்து சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது சிலைகளை உடைத்த நபரையும் கைது செய்து விசாரித்து சிறையில் அடைத்தனர் .என்பது குறிப்பிடத்தக்கது.