பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் குன்னம் பேருந்து நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நெய்வேலியில் விளை நிலங்களை என் எல். சி நிறுவனம் கையகப்படுத்துவதை கண்டித்து போராட்டம் நடத்தினர் அவரை தடுத்து போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து குன்னத்தில் மாவட்ட அமைப்பு தலைவர் மருதவேல் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பாமக தெற்கு ஒன்றிய செயலாளர் துங்கபுரம் ராஜ்குமார் .தலைமை கழக பேச்சாளர் கவிஞர் தமிழ் இனியன். விவசாய அணி மாவட்ட தலைவர் கல்ல புதூர் ரவி, வேப்பூர் தெற்கு ஒன்றில அமைப்பு செயலாளர் பழனிவேல். முன்னாள் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி, மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் கண்ணதாசன். அன்புமணி தப்பிகள் படை ஆனந்தகுமார், ஒன்றிய மாணவர் அணி சுபாஷ். இளைஞர் அணி செல்வா. உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.