பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகே இயங்கிவரும் தினசரி மார்கெட் பகுதியில் நகராட்சி சார்பில் பொதுப்பாதையினை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் கடைகளின் பொருட்கள், கம்பங்கள்,பெயர் பலகைகைளை காவல்துறையினர் உதவியுடன் நகராட்சி ஆணையர் ராமர் தனது அலுவலர்களுடன் ஆக்கிரமிப்புகளை ஈடுபட்டார். அப்போது அங்கு சாலையோரத்தில் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் சாலையோர வியாபாரிகள் தங்கள் தள்ளுவண்டிகளை அகற்ற கூடாது. தினசரி வரும்
வருமானத்தை கொண்டு தினசரி கடன்கள் அடைத்து வருகிறோம் இதை வைத்துதான் பிழைக்கிறோம் தள்ளுவண்டியை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆக்கிரமிப்பிற்காக வந்த நகராட்சி வாகனங்களிற்கு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் உதவியாளர் பார்த்திபன் மற்றும் நகராட்சி ஆணையர் பணியாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கலைந்து சென்றனர்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.