தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின் முதல் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் அருள் ஜோஸ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.பொதுச்செயலாளர் வி. இருதயராஜன் முன்னிலை வகி்த்தார். பொருளாளர் சந்திரசேகரன், மாநில செயலாளர்கள் பாலகிருஷ்ணன், எம். சின்னசாமி உள்ளிட்ட அனைத்து மாவட்ட நிர்வாகிகள், மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் பென்சனர்கள் அனைவரும் முழுமையாக பயனடையும் வகையில் அந்த திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.
70 வயதை கடந்த பென்சனர்களுக்கு 10 சதவீதம் பென்சனை உயர்த்தி வழங்க வேண்டும்.
மத்திய அரசைப்போல , தமிழக அரசும், ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும்.
20 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு முழு பென்சன் வழங்க வேண்டும். மருத்துவபடி ரூ.1000 ஆக உயர்த்தி தர வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மத்திய ,மாநில அரசுகள் காலிப்பணியிடங்களைஉடனே நிரப்ப வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2 லட்சகமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.