தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு இன்று தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் கோவிந்தராஜு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தமிழ்மணி கோரிக்கைகளை விளக்கி பேசினார். போக்குவரத்து துறை ஓய்வூதியர் நல அமைப்பு பாஸ்கரன் வரவேற்றார். மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குருசாமி தொடக்க உரையாற்றினார்.
போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் . 70 வயது அடைந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு நடைமுறையை எளிமைப்படுத்தி காசில்லா மருத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டன.
இதில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி, போக்குவரத்து துறை ஓய்வூதியர் நல அமைப்பு மாநிலத் துணைத் தலைவர் ஞானசேகரன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ராஜகோபாலன் நிறைவு உரையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்