தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின் முசிறி வட்டக் கிளை கூட்டம்
தலைவர் பெ.முத்துகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் மு. பொன்னுசாமி வரவேற்றார். 16-12-2023ல் திருச்சியில் நடைபெறும் மாவட்ட “ஓய்வூதியர் தின விழா” சிறப்புக் கூட்டத்தில், முசிறி வட்டக்கிளை சார்பாக அதிக அளவில், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென தலைவர் கேட்டுக்கொண்டார்.
செயலாளர்செ.திருஞானம் மாதாந்திர செயலறிக்கை வாசித்தார். மேலும் சென்ற மாதம் உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்டதாகக் கூறினார். எதிர்வரும் 2024 புத்தாண்டில் ஜனவரி மாதக் கூட்டத்திற்குள் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தினார். கூட்டத்தில், உறுப்பினர்கள் எஸ்.செல்லப்பன், எல் .பிரபாவதி, எஸ்.பாலா ஆகியோர் உரையாற்றினர். பொருளாளர் சி.செல்வராஜு வரவு, செலவு அறிக்கை வாசித்து ஒப்புதல் பெற்றார். கூட்டத்தில், கலந்து கொண்ட அனைவரும் தலைவர் முத்துகிருஷ்ணனுக்கு 80வது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இறுதியாக ஏ.அமல்ராஜ், நன்றி கூறினார்.
ஓய்வூதியர்களின் குடும்ப நல நிதி, ரூபாய் 50 ஆயிரம் வழங்குவதை, ரூபாய் ஒரு லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
கொரோனா சிகிச்சை எடுத்துக்கொண்ட ஓய்வூதியர்களுக்கு, செலவழித்த முழு தொகையையும் வழங்க வேண்டும்என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.