Skip to content
Home » தேமுதிகவின் பலம் குறையவில்லை…… திருச்சியில் பிரேமலதா ….

தேமுதிகவின் பலம் குறையவில்லை…… திருச்சியில் பிரேமலதா ….

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் வளாகத்தில் தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்… ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் நன்கு அறிமுகமானவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவார் – அவரை பார்க்கும் போது விஜயகாந்தை பார்ப்பது போல் மக்கள் எண்ணுகிறார்கள் – அதனால் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது – ஈரோடு கிழக்கு தொகுதியில் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் எனவே தேமுதிகவின் பலம் குறையவில்லை என்பதை இந்த ஈரோடு இடைத்தேர்தல் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளலாம்.

இடைத்தேர்தல் என்பது ஜனநாயகமா அல்லது பனநாயகமா .. அது எப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. எழுதாத பேனாவுக்கு நினைவு சின்னம் வைப்பது என்பது தேவையில்லாதது – அதுவும் கடலில் வைப்பது என்பது தேவையில்லாதது. எங்களது கட்சியை யாரும் பின் நின்று இயக்கவில்லை – தேமுதிக தலைவர் விஜயகாந்த் மட்டுமே இயக்குகின்றார். மக்களது வரிப்பணத்தை கொண்டு பல திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளாமல் நிலையில் இது போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *