சென்னை மெரினா கடலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக ரூ. 81 கோடியில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
பேனா சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி, அதிமுக மற்றும் மீனவர்கள் அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்னை மெரினாவில், பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளை ஜூலை 7-ம் தேதிக்கு ஒ சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது. வழக்கில் தேவையான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பேனா நினைவுச் சின்னத்துக்கு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த இடையீட்டு மனுவும் விசாரணைக்கு ஏற்றுள்ளது.