தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (2.08.2023) தலைமைச் செயலகத்தில், வனத்துறை சார்பில் நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ள வி. பெள்ளிக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார். இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மரு.மா. மதிவேந்தன், தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாகு, இ.ஆ.ப., மற்றும் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் திரு. ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி, இ.வ.ப., திருமதி பெள்ளி அவர்களின் கணவரும் யானை பராமரிப்பாளருமான திரு. பொம்மன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
