திருச்சி மேலபுதூர் தூய மேரியன்னை ஆலய மண்டபத்தில் தமிழக ஆயர் பேரவை சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஆயர் பேரவை தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி, பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி, திருச்சி மறைமாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கூறியதாவது:
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இருமாதங்களாக வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் அங்கு கலவரம் ஓயவில்லை. வீடுகள் ,குடியிருப்புக்கள். உடமைகள் எரிக்கப்பட்டுன ஏத்தாழ 300 தேவாலயங்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டுள்ளன. சில தேவாலயங்கள் எரிக்கப்பட்டன. புனிதப் பொருட்கள் சூறையாடப்பட்டன. மக்கள் உயிருக்கு அஞ்சி ஊர்களிலிருந்து இடம் பெயர்ந்து காடுகளிலும், முகாம்களிலும் ஏறத்தாழ 30,000 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அன்றாட வாழ்க்கைக்கான உணவு ,மருந்துப் பொருட்கள் உட்பட, அனைத்திற்கும் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது இரு மாதங்களாய் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகையால் மத்திய , மாநில அரசுகள் உடனடியாக மணிப்பூரில் நடக்கும் வன்முறையை முற்றிலும் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்கு அமைதி சூழல் உருவாக வழிவகை செய்ய தமிழக ஆயர் பேரவை வலியுறுத்துகிறது. குறிப்பாக இனி வரும் காலங்களில் மக்களின் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டும் .
இதனை தொடர்ந்து அடுத்த மாதம் ஜூலை 2 ம் தேதி, ஞாயிறு அன்று தமிழக முழுவதும் அமைதிப் பேரணி, மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி போன்ற சமூகச் செயல்பாடுகள் மூலம் மணிப்பூர் மக்களின் துயரங்களை நாம் உணர்ந்திடவும். பிறருக்கு உணர்த்திடவும் முயல்வோம் ,அது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தின் செய்தியாக அமையும், மேலும் மணிப்பூர் மக்களுக்கும். குறிப்பாகக் கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் நமது நிறுவனங்களின் மூலம் இயன்ற வழிகளில் நாம் உதவிட முயல்வோம். மணிப்பூர் மக்களின் உடனடித் துயர் துடைக்க தமிழக ஆயர்களின் சமூகப்பணி நிறுவனத்தின் மூலம் நம்மாலான பொருளாதார உதவிகளைச் செய்ய முயல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.