புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள குளங்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தூர்வாரும்பணி மற்றும் குளக்கரைகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை
அகற்றும் பணி நடைபெற்றது. இந்த பணியினை கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா பார்வையிட்டார்.
மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது ) முருகேசன் , உதவி இயக்குனர் (கனிமங்கள்) லலிதா , வட்டாட்சியர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.