Skip to content
Home » காவலர்களுக்கான பயிற்சி….. திருச்சி உள்பட 8 இடங்களில் நாளை தொடக்கம்

காவலர்களுக்கான பயிற்சி….. திருச்சி உள்பட 8 இடங்களில் நாளை தொடக்கம்

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு காவல் துறைக்கு இரண்டாம்நிலைகாவலர்களாக தேர்ச்சி பெற்றவர்களில் 350 பேருக்கு திருவெறும்பூர் அடுத்த  நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் நாளை (4ம் தேதி) முதல் 7 மாத கால பயிற்சி துவங்குகிறது

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் மூலம் தமிழ்நாடு காவல் துறைக்கு இரண்டாம் நிலை
காவலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு அண்மையில் நடந்தது.

அதில் 2 ஆயிருக்கு665 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர் அவர்களில் வழக்கமான ஆயிரத்து598 பேரில் (ஆயுதப்படை பெண் – 779 & தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆண் – ஆயிரத்து819] மற்றும் (பின் தங்கிய – 67 (ஆயுதப்படை பெண் – 13, ஆயுதப்படை ஆண் – 12 & தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆண்கள்-42) இரண்டாம் நிலை காவலர்களாக பணியமர்த்தப்பட்டனர்.

அவர்களுக்கு தமிழக முதல்வர் கடந்த 27ம் தேதி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 7 மாத கால அடிப்படை பயிற்சியும் மற்றும் ஒரு மாத கால நடைமுறை பயிற்சியும் அளிக்கப்படும்.

இப்பயிற்சியானது திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், கோவை, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய 8 நிரந்தர காவலர் பயிற்சி பள்ளிகளில் அளிக்கப்படுகிறது.

மொத்தம் தேர்வு செய்யப்பட்ட 2 ஆயிரத்தி 665 காவலர்களில் 792 பெண் ஆயுதப்படை காவலர்கள்.  திருவள்ளூர் பயிற்சி மையத்தில்  300, வேலூர் 200 மற்றும் விழுப்புரம் பயற்சி மையத்தில் 292 பெண்களுக்கு  பயிற்சி  அளிக்கப்படுகிறது.

ஆயிரத்து 861 ஆண் தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் மற்றும் பின்தங்கிய ஆயுதப்படை ஆண் காவலர்கள் 12

சேர்த்து மதுரை பயிற்சி மையத்தில் 389 பேரும், தூத்துக்குடி 512 பேரும், சேலம் 422 பேரும், திருவெறும்பூர் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் 350 பேரும் மற்றும் கோவை 200 பேரும் பயிற்சி  பெற உள்ளனர்.

அடிப்படை பயிற்சியின் போது, பயிற்சி காவலர்களுக்கு வெளிப்புற மற்றும் உட்புற நடவடிக்கைகள் சம்மந்தமான பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு வெளிப்புற செயல்பாடுகளில் உடல் பயிற்சி, கவாத்து அணிவகுப்பு, துப்பாக்கி சூடு, கமாண்டோ பயிற்சி, ஜங்கிள் பயிற்சி போன்றவை அடங்கும் மேலும் உட்புற செயல்பாடுகளில் சட்டம், கைரேகை, முதலுதவி, அறிவியல் சார்ந்த புலனாய்வு, உளவியல்,
வாழ்க்கை நெறிமுறைகள் மற்றும் வாழ்க்கை சமநிலை
போன்றவையும் அளிக்கப்படும்.

மேற்கண்ட தேர்வு செய்யப்பட்ட பயிற்சி காவலர்களுக்கு

நாளை (4ம் தேதி) முதல் பயிற்சி துவங்கஉள்ள நிலையில் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி காவலர்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும்  செய்யப்பட்டுள்ளது.

பயிற்சி காவல்துறை இயக்குனர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின்பேரில் 8 காவல் பயிற்சி பள்ளிகளிலுள்ள உட்புற மற்றும் வெளிப்புற பயிற்றுனர்களுக்கு முதல்முறையாக பயிற்றுனர்களுக்கான பயிற்சியை (டி ஒடி) மதுரை காவல் பயிற்சி பள்ளியில் கடந்த மாதம் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடத்தப்பட்டது.பயிற்சியை திறம்பட நடத்துவதற்கும் அவர்களின் திறனை மேம்படுத்துவதற்கும் இப்பயிற்சி
நடத்தப்பட்டது.

இப்பயிற்சியில் சுமார் 158 உட்புற மற்றும் வெளிப்புற காவல் ஆளிநர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

சந்தீப் ராய் ரத்தோர், நேற்று (2ம் தேதி). வேலூர் மற்றும் சேலம் காவல் பயிற்சி பள்ளிகளுக்கு சென்று அங்கே மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஏற்பாடுகள குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

பயிற்சி காவலர்களுக்கான அடிப்படை பயிற்சியை திறம்படவும், வெற்றிகரமாகவும் நடத்துவதற்கான அனைத்து ஆயத்த ஏற்பாடுகளும்  நவல்பட்டு அண்ணா நகர் காவலர் பயிற்சி பள்ளி உட்பட 8 காவல் பயிற்சி பள்ளிகளிலும்  சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *