அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம் இது நாள் வரை 231.24 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 2819 மெ.டன் யூரியா, 1809 மெ.டன் டி.ஏ.பி 787 மெ.டன் பொட்டாஷ்; மற்றும்; 3227 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளது.
இதுவரை சான்று பெற்ற நெல் விதைகள்; வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் மூலம் 31 மெ.டன், தனியார் விதை விற்பனை மையங்கள் மூலம் 120 மெ.டன் என கூடுதலாக 151 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 130 மெ.டன்; நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது. தற்போது 520 எக்டரில் நடவு செய்வதற்கான நாற்றங்கால் தயார் நிலையில் உள்ளது. குறுவை சாகுபடிக்கு உகந்த ரகங்களான ஆடுதுறை 45, கோ-51, திருப்பதிசாரம் 5 போன்ற நெல் ரகங்கள்
இதுவரை 31 டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 130 டன் விதைகள் அனைத்து வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பில் உள்ளது. குறுவை நெல் விதைகள் விதை கிராம திட்டத்தில் ஒரு கிலோ ரூ. 17.50 வழங்கப்படுகிறது. மேலும் நெல் நுண்சத்து, உயிர் உரங்கள், சூடோமோனாஸ், ட்ரைக்கோடெர்மா போன்ற உயிரியல் காரணிகள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் விவசாயிகள் நேரடியாக கலந்துகொண்டு வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்பொறியியல் துறை, மின்சாரத்துறை, கால்நடைத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் கூட்டுறவுத்துறை தொடர்பான கோரிக்கைகள் விவசாயிகளால் எழுப்பப்பட்டது. இதில் துறைவாரியாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்தனர். மேலும் விவசாயிகள் அளித்த மனுவிற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அனைத்துத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுரை வழங்கினார்.