பெரம்பலூர் மாவட்டம், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடைபெற்ற முப்பெரும் விழாவில் பல்வேறு துறைகளின் மூலம் 2,297 பயனாளிகளுக்கு ரூ.16.70 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா, பல்வேறு அரசுத்துறைகளின் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பல்வேறு துறைகளின் மூலம் 2,297 பயனாளிகளுக்கு ரூ.16.70 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் இன்று (05.02.2024) வழங்கினார். இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
2,297 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி அமைச்சர் சிவசங்கர்…
- by Authour
