புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஊராட்சி ஒன்றியம் கும்மங்குடி ஊராட்சி தெற்கு பொந்து புள்ளியில்
சட்டமன்ற உறுப்பினர் தொகுதிமேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூபாய் 13லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள
புதிய நியாய விலைக் கடையினை ஊழல் தடுப்பு மற்றும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து
பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை ஆர்.டி.ஓ.முருகேசன், அரிமழம் ஊராட்சி ஒன்றியகுழுதலைவர் மேகலாமுத்து, முன்னாள் தலைவர் பொன்.ராமலிங்கம், மாவட்ட ஊரகவளர்ச்சித்துறைசெயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன், அறந்தாங்கி சரக துணைப் பதிவாளர் ஆறுமுகப் பெருமாள் மற்றும்உள்ளாட்சிபிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.