மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் நகைக்கடனுக்காக பெறப்பட்ட நகைகள் போலியானவை என தணிக்கையின்போது கண்டறியப்பட்டது. அவ்வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்த ஜீவானந்தம் என்பவர் 15 வாடிக்கையாளர்கள் பெயரில் 21 நகை பைகளில் போலி நகைகளை அடகு வைத்து, வாடிக்கையாளர் பெயரில் அடகு கடன் பெற்றதும், அந்த வகையில் ரூ.50 லட்சம் பணமோசடி நடைபெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, வங்கி மேலாளர் தினேஷ் அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை மாவட்டக்குற்றப்பிரிவு போலீசார் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் ஜீவானந்தத்தை பிடித்து விசாரித்ததில்
கடந்த 2015ஆம் ஆண்டு சொந்த வீடு கட்டுவதற்கு போலி நகைகளை வங்கியில் வைத்து பணம் பெறலாம் என்று திட்டம் தீட்டி கடந்த 2016ஆம் ஆண்டு நகைக்கடன் வாங்கிய நபரை வரவழைத்து நகை மூழ்கப் போகிறது அதை மாற்றி வைக்கவேண்டும் என்று கூறுவார் அவர்களும் வந்து புதிய நகைக்கடனுக்கான விண்ணப்பம், , பணத்தை எடுப்பதற்கான செலான் பேப்பர் என அனைத்திலும் கையொப்பம் வாங்கிவிட்டு அனுப்பிவிடுவார், ஓரளவிற்கு விபரம் அறியாமல் வரும் நபர்களாப் பார்த்து இந்த காரியத்தை செயல்படுத்தி வந்துள்ளார்.
அவர்கள் வங்கியை விட்டு சென்றதும் ஜீவானந்தம் தயாராக வைத்திருந்த போலி நகைகளை எடுத்து கையொப்பம் பெற்றவர்களது பெயரில் அடகு வைத்து பணம் பெறும் சலானை எடுத்து கவுன்ட்டரில் கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்வார், இதுபோன்று போலி நகைகளை வைத்து ரூ. 2லட்சம் முதல் ரூ.3.5 லட்சம்வரை எடுத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார், நகை தணிக்கையின்போது போலி நகை என தெரியவந்தது, கடன் பெற்றோரிடம் சென்று கேட்டால் நாங்கள் வாங்கவில்லை என மறுத்துவீட்டனர். ஒய்வூதியம் பெற்றுவரும் கலியமூர்த்தி என்ற நபர் பெயரில் 4 லோன் போட்டு ரூ.12 லட்சம்வரை கடன் பெற்றுள்ளார். 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டுவரை இவர் 15 நபர்களது பெயரில் 21 நகைப் பைகளை வைத்து ரூ.50 லட்சம்வரை மோசடி செய்துள்ளார்.
ஏமாற்றப் பட்டவர்கள் ஒன்று திரண்டு வங்கியில் தகராறு செய்தபோது உடனடியாக வங்கி மேலாளர் தினேஷ் அளித்த புகாரின்பேரில் ரூ.20 லட்சம்வரை திருப்பி செலுத்தியுள்ளார். இதுகுறித்து மயிலாடுதுறை குற்றப்பிரிவு போலீசார் ஜீவானந்தம் மீது வழக்குப் பதிவுசெய்து அவரைக் கைதுசெய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் நகைக்கடன் பணியில் கவனக்குறைவாக இருந்த 3 வங்கி அதிகாரிகள்மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது-