தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அடுத்த பட்டுக்குடி கொள்ளிடம் ஆறு அரசு மணல் குவாரியில் அமலாக்கத் துறையினர் நேற்று முன் தினம் டிரோனை பறக்க விட்டு ஆய்வு மேற்க் கொண்டனர். கடந்த மாதம் மணல் குவாரி மற்றும் குவாரிகளை நடத்திவரும் தொழிலதிபர்கள் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் பல்வேறு குழுக்களாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். இதனால் சில குவாரிகளில் மணல் அள்ளுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் அமலாக்கத் துறையினர் கொள்ளிடம் ஆற்றின் மணல் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அய்யம்பேட்டை அருகே பட்டுக்குடி
கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டு வரும் மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர் கான்பூர் ஐஐடி குழுவினர் உதவியுடன் ஆய்வு செய்தனர். மணல் அள்ளிய பகுதியில் டிரோனை பறக்க விட்டனர். சுமார் 300 அடி உயரம் வரை சென்ற டிரோன் மணல் எடுத்த பகுதிகளை படம் பிடித்தது. இதனால் அந்தப் பகுதியில் கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதேப் போன்று நேற்றும் அமலாக்கத் துறை உதவி இயக்குநர் சென்னை தலைமையில் பட்டுக் குடியில் கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு மேற்க் கொண்டனர். சிஆர்பிஎப் போலீஸ் உதவியோடு டிரோனை பறக்க விட்டும், மணல் எடுத்தப் பகுதியில் அளவீடுச் செய்தனர். இதனால் கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.