Skip to content

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற எஸ்.ஐ. அனுராதா, திருமணம்

காமன்வெல்த் போட்டியிலும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிலும்  பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வென்றவர்  பெண் எஸ்.ஐ.  பி.அனுராதா. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த   இவர் தற்போது  பட்டுக்கோட்டையில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும்,  போலீஸ்காரர் பி. விஜய்  என்பவருக்கும்   குமரமலை முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை ஆயுதப்படை மண்டபத்தில் வரவேற்பும்  நடைபெற்றது.  திருமண வரவேற்பில் அரசியல் பிரமுகர்கள் அனைத்து அரசு துறை அதிகாரிகள் விளையாட்டு வீரர்கள் காவல்துறை அதிகாரிகள்,  பளுதூக்கும் பயிற்சியாளர்  முத்துராமலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 

error: Content is protected !!