தஞ்சை மாவட்டம், பாபநாசம், பட்டுக் கோட்டை அழகிரி மேல் நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றத் தொடக்க விழா நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த அறிவியல் மன்றத் தொடக்க விழாவிற்கு பள்ளிச் செயலர் செல்வராசு தலைமை வகித்தார். முன்னதாக அறிவியல் துறைத் தலைவர் ஸ்டீபன் ஞான சேகர் வரவேற்றார். தலைமைச் செயலர் கலிய மூர்த்தி, நிர்வாகச் செயலர் கைலாசம், நிதிச் செயலர் பொம்மி, அறங்காவலர்கள் திருஞான சம்பந்தம், ஜெயராமன், பூவானந்தம், வரதராஜன், பேராசிரியர் சேதுராமன், ஆடிட்டர் சண்முகம், குருசாமி, ஆசிரியர் மோகன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் தீபக், துணை முதல்வர் சித்ரா வாழ்த்திப் பேசினர். அறிவியல் மன்றத்தை தொடங்கி வைத்து அறிவியல் மனப் பான்மை வளர்ப்போம், அறியாமை அகற்றுவோம் என்றத் தலைப்பில் திராவிடர் கழகப் பொதுச் செயலர் சந்திரசேகரன் பேசினார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். முதுகலை ஆசிரியர் கிருஷ்ண வேணி நன்றி கூறினார்.
பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றத் தொடக்க விழா…
- by Authour
