தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரத்தில் எழுந்து அருள்பாலித்துவரும் ஸ்ரீ வாராஹி அம்மன், ஸ்ரீ கால பைரவர் நூதன ஆலய அஸ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து நாதஸ்வரம், மேளம் முழங்க கடம் புறப்பட்டு கோயிலை சுற்றிவந்து அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன்,
ஸ்ரீ கால பைரவருக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன், ஸ்ரீ கால பைரவரை வணங்கிச் சென்றனர்.
